அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த ஆண்டு ஒன்றறை லட்சம் பேர் எழுதிய தேர்வை முறைகேடுபுகார் காரணமாக தமிழக அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புற்றுநோய் போல பெருகி வரும் ஊழல்களே நாட்டின் வளர்ச்சிக்கு தடை என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், இந்த முறைகேட்டில் ஏராளமான நபர்களுக்கு தொடர்பிருப்பதால், தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார