சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னைக்குள் நுழைவதை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நகரில் 6000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு, தனியார் பேருந்துகள், வேன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது