சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள்தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை ஹாஜி தமிழகத்தில் நாளை மறுநாள்தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் என்று தமிழக தலைமை ஹாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.