நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா பன்னிரெண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். அதில் தமிழகத்தில் 1.02 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அவர்களை அலைக்கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள், ஜுன் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. இதில், பீகாரைச் சேர்ந்த கல்பனா குமார் என்கிற மாணவி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த 1,14,606 பேர் நீட் தேர்வை எழுதினர். அதில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்கிற மாணவி 676 மதிப்பெண் எடுத்து அகில அளவில் 12ம் இடத்தை பிடித்துள்ளார்.

இதில் மொத்த மதிப்பெண் 720 என்பது குறிப்பிடத்தக்கது