*பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*
*திருகுறள்*
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
விளக்கம்:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேராது.
*பழமொழி*
Too much of anything is good for nothing.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
*பொன்மொழி:*
பல வெற்றிகளைப்
பெற்றவன் இதயம் பூ என்றால் பலத் தோல்விகளைப் பெற்றவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
- *விவேகானந்தர்*
*இரண்டொழுக்கப் பண்பாடு*
1.நான் யாரிடமும் யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டேன்.
2.பிற உயிரினங்களை துன்புறுத்தாமல் பாதுகாப்பேன்.
*பொதுஅறிவு*
1. பற்பசையில் இருக்கும் வேதிப்பொருள் யாது ?
விடை: கால்சியம் கார்பனேட்.
2.உலகின்" தாய் " எனப்படும் நகரம் எது?
விடை: கெய்ரோ
*நீதிக்கதை*
அருமையான கதை.
ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார்.
(அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்
டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான்.
இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்
டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............
அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------
--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.b
பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்
*இன்றைய செய்திகள்*
17.07.2018
* மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீா்வரத்து அதிகரித்தது.
* பிரிட்டனில் யோகாசனப் பயிற்சியில் பல சாதனைகள் நிகழ்த்தியதற்காக, 8 வயது யோகா சாம்பியன், நிகழாண்டின் சிறந்த பிரிட்டன்வாழ் இந்தியராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
* மாத சம்பளம் பெறுவோர் வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் (ஜூலை 31) அதனை தாக்கல் செய்யாதோருக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
*இலங்கை கேப்டன், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி தண்டனை அறிவித்து திங்கள்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.
*Today's headline*
Mumbai: Elderly parents can take back a share in the their property given to a son as a gift if he fails to look after them or Harasses them ,the Bombay High Court has ruled
TN braces for flat as Cauvery inflow to touch 90,000 cusecs,
 Coimbatore Race Course Road on the smart development to become pedestrian friendly under Smart City project
 Tennis :Novak Djokovic won his first Grand Slam title in 2 years defeating Kevin Anderson in the Wimbledon men's singles final on Sunday ,it was the fourth Wimbledon crown for Djokovic formal world number one who dropped out of the top 20 earlier this year.