👉🏼மொத்த மாநிலத்தின் வருவாயில் 71 % அரசு ஊழியர் , ஆசிரியர் சம்பளமாக வழங்கப் படுகிறது என தவறான கண்ணோட்டம் மக்களிடையே பரப்ப படுகிறது...

👉🏼இதிலுள்ள முழு விவரம் & முழு விளக்கம் எனக்கு தெரிந்தவரை பதிவிடுகிறேன் , நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்....

👉🏼 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958) தற்போது 2018 ல் இந்த மக்கள் தொகை எவ்வளவு உயர்ந்து இருக்கும் அல்லவா ?

👉🏼தமிழ்நாட்டில் மொத்த அரசு ஊழியர் , ஆசிரியர்கள் எண்ணிக்கை சற்றே ஏறக்குறைய 12 லட்சம் பேர்...

👉🏼8 கோடி மக்களுக்கு பணியாற்ற 12 லட்சம் பேர்...

👉🏼மொத்த மக்கள் தொகையில் அரசு ஊழியர் ஆசிரியர் எண்ணிக்கை 2 அல்லது 3 சதவீதம் , அதாவது 97% மக்களுக்கு பணியாற்ற 3% ஊழியர்கள் - இதன் மூலம் ஏற்படும் பணிச்சுமையை உணரமுடியும் ...

👉🏼அரசு என்பது லாப நோக்கம் கருதாது மக்களுக்கு சேவையாற்றும் அமைப்பு , அத்தகு அரசின் நலத்திட்டங்களை இந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வழியாகத்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்...

👉🏼சம்பள உயர்வு என்பது தற்போதுள்ள விலைவாசி , வளர்ச்சி , தனிமனித வாங்கும் சக்தி இவற்றை வைத்தே அளவிடப் படுகிறது...

👉🏼போராட்டம் நடத்துவதால் வாரி வழங்கவிட யார் அப்பன் வீட்டு பணமும் இல்லை, சாதாரண கூலி தொழிலாளி வருமானம் கூட உயர்ந்து வரும் நிலையில் 8 கோடி மக்களுக்கு பணியாற்றும் ஊழியரின் சம்பளம் தற்போது மத்திய அரசு வழங்கும் ஊதியத்தின்படி மாநில பணியானர்களுக்கும் வழங்க கோருவதில் என்ன தவறு...?

👉🏼உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற 5 வருடத்தில் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துவிடுவர் , அவர்கள் ஊதியம் எவ்வளவு , எப்படி 5 வருடத்தில் கோடி கணக்கில் சொத்து வந்தது என யாரும் கேட்பதில்லையே ஏன் ?

👉🏼MLA க்கள் ஊதியம் மாதந்தோறும் சம்பளம் மற்றும் படிகளுடன் சேர்த்து பெறும் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்.
234 பேருக்கு 5கோடியே 85 ஆயிரம் , இது தவிர ஒரு நாள் MLA வாக இருந்தால் கூட கடைசி வரை பென்சன் , இதர சலுகைகள் எக்கசக்கம் , இவர்களுக்கு செலவாகும் தொகை அரசு ஊழியர்கள் சம்பளமாக வழங்கப்படும் 71% ஊதியத்திலிருந்து கழித்து விடுங்கள் மக்களே , மீதி தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த படி 41%

👉🏼நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் , 10 லட்சம் மதிப்பு என்று வைத்துக் கொள்வோம் , இதில் கொத்தனார் கூலி சற்றே ஏறக்குறைய 50% ஆக இருக்குமா? இல்லையா ?   அதேபோலத்தான் அரசு நடத்த இந்த அரசு ஊழியர்கள் தேவை , அரசு அலுவலகங்களில்  மின்விசிறி , நாற்காலி , கழிவறை கூட இருக்காது, டப்பா கம்பயூட்டர்ஸ் , ஒன்றும் வேண்டாம் அரசு பேருந்து ஓட்டுநரை கேட்டுபாருங்கள் அந்த பேருந்தை வைத்து கொண்டு அவர் படும் சிரமத்தை .....

👉🏼சரி இறுதியாக MLA க்களின் சொத்து மதிப்பு , நீங்கள் வாரி வழங்கிவிட்ட 30 ஆண்டுகள் பணிசெய்த அரசு ஊழியர்கள் சொத்து மதிப்பு , இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாங்கியுள்ள கடன் எவ்வளவு , அதற்கு அவர்கள் செலுத்து தவணை எவ்வளவு , இதேபோல MLA உட்பட இதர அரசியல் உழைப்பாளிகள் யாராவது கடன் வாங்கி உள்ளனரா என்பதை அறிக்கையாக வெளியிட அரசு தயாரா ?

👉🏼மாநிலத்தின் வருவாய் உயராமல் அதே நிலையில் இருந்தால் ஆட்சியாளர்கள் PERFORMANCE MATRIX என்ன என்பதை மக்களே உணர்வார்கள்....k