மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சுமார் 80 சதவிகித பணம், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கேசெலவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்கிறது.
அதிலும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை குழு அமைத்து, ஒரே அடியாக கணிசமாக சம்பளத்தை உணர்த்தும் நடைமுறையும் இருந்து வருகிறது.தற்போது ஏழாவது ஊதியக்குழுவின் சம்பள பரிந்துரை அமலில் உள்ளது. இதனை இந்தியா முழுவதும் ஒரே சீராக அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.தற்போதைய நடைமுறையின் படி, மத்திய அரசில் குறைந்த பட்ச சம்பளமாக 18 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த அடிப்படையில் மாநில அரசின் ஊதியமும் மாற்றியமைக்கப்பட்டது.தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால், குறைந்தபட்ச ஊதியத்தை 20 ஆயிரமாக மாற்றி அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் அரசுக்கு மேலும் செலவினம் அதிகரிக்கும்என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இனி ஊதியக்குழு அமைத்து சம்பளத்தை பரிந்துரை செய்யும் முறை விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.வருடா வருடம் கொடுக்கப்படும் ஊதிய உயர்வு மட்டுமே அமலில் இருக்கும் என்றும், விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..