புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியவர்களுக்கு, உரிய தொகை வழங்காததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
அதற்கும் சேர்த்து, புதிய புத்தகங்கள் எழுதும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், பேராசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து, புத்தகம் எழுதும் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
இந்த பணியில், அனுபவமும், நிபுணத்துவமும் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகிறோம். இரவு, பகல் பாராமல் பாடங்களை எழுதிஉள்ளோம். இதற்காக, பல்வேறு புத்தகங்களையும், தரவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.ஆனால், ஆசிரியர்களுக்கான உழைப்பூதியமோ, தனி சம்பளமோ வழங்கப்படவில்லை. தினமும், 500 முதல், 1,000 ரூபாய் சம்பளம் நிர்ணயித்து, கையெழுத்து மட்டும் பெற்றுஉள்ளனர்.ஆனால், கடந்த ஆண்டு புத்தகம் எழுதும் பணியில் ஈடுபட்டதற்கே, இன்னும் சம்பளம் வழங்கவில்லை.ஆசிரியர்கள், தங்களின் பள்ளி வேலை நேரம் போக, மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், இதில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு உரிய கவுரவமும், ஊக்கமும் அளிக்க வேண்டிய நிலையில், ஊதியமோ, செலவு தொகையோ கூட வழங்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..