நாசா தனது OSIRIS-REx எனும் விண்வெளி ஓடத்தின் உதவியுடன் அபாயகரமானது எனக் கருதப்படும் Bennu சிறுகோளின் புகைப்படத்தை முதன் முதலாக படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

இப் புகைப்படம் கடந்த ஓகஸ்ட் 17 ஆம் திகதி அன்று கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது.

OSIRIS-REx எனப்படும் ஆய்வு ஓடமானது இரு வருடங்களுக்கு முன்னர் புளோரிடாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டிருந்தது.

இது தற்போது தனது பணி நடவடிக்கைகளை பூர்த்திசெய்யும் தருவாயிலுள்ளது.


Bennu ஆனது கிட்டத்தட்ட 1,600 அடி அகலமான மிகப் பழமைவாய்ந்த சிறுகோள்.

4.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படும் இச் சிறு கோள் அது தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை சிறு மாற்றமேதுமின்றிக் காணப்படுகிறது.

தற்போது விஞ்ஞானிகள் இக் கோளானது நீர், பெறுமதிமிக்க உலோகங்கள் மற்றும் சேதன கூறுகளைக் கொண்டுள்ளதா என்பது பற்றி ஆராயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது போன்ற சிறு கோள்கள் ஒரு காலத்தில் வர்த்தக ரீதியான வளங்களை தரக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.