பின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
உலகிலேயே மிக வெற்றிகரமான கல்விமுறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவே.

சர்வதேச மாணவர் மதிப்பீட்டின்படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளைவிட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.

ஆனால், 1960களின் இறுதிவரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைபள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.

புதுமையான சீர்த்திருத்தங்கள்

பின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
பெருஸ்கூலு (peruskoulu) - ஃபின்லாந்தின் கட்டாய கல்வித்திட்டத்தின் வெற்றிக்கதை இதுதான். 1970களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1990களில் பல புதுமையான சீர்திருத்தங்களால் மேம்படுத்தப்பட்டது.

ஃபின்லாந்தின் இந்த அற்புதமான கல்விமுறையை குறித்து தெரிந்து கொள்ள பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அங்கு செல்கின்றனர். கல்விக் கொள்கைகள் மட்டும் அல்லாது பயனுள்ள சமூக கொள்கைகளும், இந்த உயர்தர கல்விமுறைக்கு காரணமாகும் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.

"ஃபின்லாந்தின் இந்த திட்டத்தின் வெற்றிக்கு, கல்வி சார்ந்த காரணிகள் மட்டுமே அடிப்படை என்று கூறமுடியாது" என்கிறார் அந்நாட்டை சேர்ந்த ஆசிரியர், ஆய்வாளர் மற்றும் கொள்கை ஆலோசகரான பசி சல்பர்க்.

"மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ஃபின்லாந்து அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் 7 வயதில் பள்ளிக்கு செல்ல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஏற்ற சூழலை அரசு உருவாக்கி தருகிறது."

கல்வி மற்றும் சமத்துவம்

 ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
சமத்துவமின்மை மக்களின் எதிர்பார்ப்பை தடுத்து, அவர்களின் வாங்கும் திறனை குறைக்கிறது - சமநிலை உள்ள சமூகங்களில், கல்வி அமைப்பு நன்றாக இருக்கிறது என தான் எழுதிய Finnish Lessons 2.0 புத்தகத்தில் பசி சல்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவம் நிறைந்த சமூகங்களில், பள்ளிகளில் மாணவர்கள் நன்றாக பயில்கிறார்கள் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சமநிலை அதிகமுள்ள நாடுகளில், அதிக கல்வியறிவுள்ள மக்கள் இருப்பதோடு பள்ளிப்படிப்பை கைவிடுப்வர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான வருமானம் இடைவெளி குறைந்துள்ள நாடுகளில் உடல் பருமன் நோய் குறைவாகவும், நல்ல மன ஆரோக்கியம் இருப்பதாகவும் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும், பாடம் கற்பிக்கும் முறைக்கும், கற்றுக் கொள்வதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு."

சமத்துவம் மற்றும் சமூக நீதி

ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
தலைநகர் ஹெல்சின்கியில் இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர்.

பள்ளிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. மேலும், பள்ளிக்கு தேவையான அனைத்தும் இலவசம்.

முதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 940 மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.

சமமில்லாத வருமானம், ஏழ்மை உள்ளிட்டவையும் கல்வி முறைகளை மேம்படுத்துவதில் முக்கிய தாக்கம் செலுத்துவதை புரிந்து கொள்ள முடிவதாக மேலும் அவர் புத்தகத்தில் பசி எழுதியுள்ளார்.

ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு ஏற்கப்பட்ட சமத்துவம் மற்றும் சமூக நீதியை வளர்பதற்கான பொருளாதார மாதிரி, ஃபின்லாந்தின் கல்விமுறை வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார் அவர்.

இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், குறைந்த விலையில் வீட்டுவசதி, குழந்தைகளுக்கான பொறுப்பை ஆண்கள் ஏற்க ஊக்குவிக்க அவர்களுக்கு விடுமுறை மற்றும் பல நலத் திட்டங்களை இந்த பொருளாதார மாதிரி வழங்குகிறது.

ஆசிரியரின் மதிப்பு

இத்திட்டத்தின் தத்துவம் பள்ளி வகுப்பறைகளிலும் பிரதிபலித்தது.

வழக்கமான ஃபின்லாந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பாடம் நடத்துவார்கள்.

அவர்களின் வகுப்பிற்கு திட்டமிட்டு, அறிவை புதுப்பித்து, மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவது குறித்து திட்டமிட ஆசிரியர்களுக்கு போதிய நேரம் இருக்கிறது. நல்ல ஊதியத்தோடு, நல்ல சூழலில் அவர்கள் பணிபுரிகிறார்கள்.


மருத்துவம், சட்டம் மற்றும் கட்டடக்கலையில் முன்னிலை வகிக்கும் ஃபின்லாந்து மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்வதை விரும்புகின்றனர்.

ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்த