அன்னவாசல்,செப்.5:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும்,ஆசிரியர் வாழ்த்து பாடல் பாடியும்,வாழ்த்துகள் அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியும் பள்ளி ஆசிரியர்களை மனம் உருகச் செய்தனர்.இது குறித்து பள்ளி தலைமைஆசிரியர் ஜெ.சாந்தி கூறியதாவது:ஆசிரியர்நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது...நம் நாட்டில் இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடுகிறோம்.இவ்விழா ஏன் கொண்டாடுகிறோம் என்றால் ஓர் ஆசிரியரான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களிடம் அவரது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்..எனவே தான் இன்று நாம் அனைவரும் ஆசிரியர் தினவிழா கொண்டாடி மகிழ்கிறோம் என்றார்..மேலும் மாணவர்களாகிய நீங்கள் இன்றைய தினத்தில் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு,ஒழுக்கமுடனும் ஊர்மக்கள் புகழும்படியாகவும் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்று டாக்டர் இராதாகிருஷ்ணனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்..பின்னர் ஆசிரியர்களை நிற்க வைத்து ஆசிரியர் தின வாழ்த்து பாடல் பாடினர்.பின்னர் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு பரிசு வழங்க தாங்கள் சிறுக சிறுகச் சேமித்த பணத்தில் வாங்கி வந்திருந்த பேனா,நாவல்பழம்,சாக்லேட், பென்சி்ல் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி தங்களது ஆசிரியர்களை மனம் உருகச் செய்தனர்..
நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்..
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..