.

புதுக்கோட்டை ,செப்,19-  கிராமப்புற பள்ளிக்குழந்தைகளிடையே சுத்தம்,சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு புதுக்கோட்டை,அறந்தாங்கி,இலுப்பூர் கல்வி மாவட்டங்களில் பள்ளிகள் அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும்,
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டியும்,
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும்,
பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வினாடி,வினாப்போட்டியும் நடத்தப்பட்டு முதலிடம் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் பள்ளிகள் அளவில் முதலிடம்  பெற்ற மாணவர்களைக்
கொண்டு அந்தந்த ஒன்றியங்களில் போட்டிகள் நடத்தி ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து  மூன்று கல்வி மாவட்டங்களிலும்,ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களைக்கொண்டு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நேற்று18-09-2018(செவ்வாய்கிழமை) மாவட்ட அளவிலானப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து சுகாதார விழிப்புணர்வு போட்டிகளின் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓவியப்போட்டியில் கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்
தொடக்கப்பள்ளி மாணவி த.லாவண்யா முதலிடத்தினைப்பெற்றார்.
கட்டுரைப்போட்டியில் குமுலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி வி.ஜெயஸ்ரீ முதலிடத்தினைப்பெற்றார்.
பேச்சுப்போட்டியில் வெண்ணாவல்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.நந்தக்குமாரன் முதலிடத்தினைப்பெற்றார். வினாடி,வினாப்போட்டியில் பொன்புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் க.கலைச்செல்வி,
இ.பர்ஜனாபேகம் ஆகியோர் முதலிடத்தினைப்பெற்றனர்.பின்னர் முதலிடம் பெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வாழ்த்தி பாராட்டினார்.போட்டிகளுக்கு நடுவர்களாக வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள் செயல்பட்டு போட்டிகளை நடத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் இலுப்பூர் க.குணசேகரன்,
அறந்தாங்கி( பொ) கு.திராவிடச்செல்வம்,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்
திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,பள்ளித்துணை ஆய்வாளர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.ஜெயராமன்,இலுப்பூர்(பொ) கி.வேலுச்சாமி,
அறந்தாங்கி சி.செல்வம் ,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட அளவிலான சுகாதார விழிப்புணர்வு போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு காந்தி பிறந்த நாளான வருகிற அக்டோபர் 2ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

   படவிளக்கம்:            புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுகாதார விழிப்புணர்வு போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கிவைத்து பேசியபோது எடுத்தபடம்.  
     
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுகாதார விழிப்புணர்வு போட்டிகளான பேச்சுப்போட்டி,வினாடி,வினா ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வாழ்த்தி பாராட்டியபோது எடுத்தபடம்..