புதுக்கோட்டை,செப்.18: செப்டம்பர் 21 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற குடும்ப உறவுகள் அனைவரும்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க மன்றம் நா.சண்முகநாதன் அழைப்பு விடுத்துளார்..

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 21 அன்று  புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள S.V.S திருமண மண்டத்தில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற புதுக்கோட்டை மாவட்டக் கிளையால் நடத்தப்படும் பணி நிறைவு பெற்ற மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா,மாற்று இயக்கங்களிலிருந்து நமது ஆசிரியர் மன்றத்தில் இணைந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற மன்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா  ஆகிய முப்பெரும் விழா நடைபெறவுள்ளது..
இவ்விழாவில் ஆசிரியர் இனக்காவலர் ஐயா ,பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டுப் பெறும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி ,விழாப் பேருரையாற்ற உள்ளார்..
மேலும் விழாவில்  சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு,திருமயம் சே.ரகுபதி ,ஆலங்குடி சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் எனவே நமது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  மன்ற குடும்ப உறவுகள் அனைவரும் செப்.21 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள S.V.S  திருமண மண்டபத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்..
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்டச்செயலாளர் க.சு.செல்வராசு,மாவட்டத்தலைவர் பெ.அழகப்பன்,மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள்
,அனைத்து ஒன்றிய செயலாளர்கள்,பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்...