உலகளாவிய அளவில் நம் மொழியானது  விருட்சகமாய் இருந்தது இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் .................. ஆனால் இன்று வேர்  அழுகிக் கொண்டிருக்கிறது. அடிப்படை  தமிழை ஆய்வு செய்யாது  இலக்கியம்   இலக்கணம்
பட்டிமன்றம்
சொற்பொழிவு  ஆன்மீகம் என்றுதான் பெரியவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் .

அடிப்படையில் நம் மொழின் எளிமையை யாரும் ஆய்வு செய்யாமல் விட்டதன் விளைவு இன்று தமிழகத்தில்  கூட குழந்தைகள் தமிழ்
படிக்க விருப்பமில்லாது   இருக்கின்றனர் .

  வெளிநாடுகளில் தமிழ் நன்றாகப் பேசுவார்கள் தேவாரம் திருவாசகம்  எல்லாம் மனப்பாடமாகத் தெரிந்திருப்பர்  ஆனால்
எழுத்து எழுதும் முறை
வடிவம் அறியாதிருக்கிறார்கள் . இது இன்றைய அடிப்படைத் தமிழின்
நிலை . எனவே அடிப்படைத் தமிழைக் காத்தலால்  மட்டுமே நம்மால் மொழி காக்க முடியும் மொழியைப் பரவலாக்க முடியும்...என்றார்.

மு. கனகா  ஆசிரியர்
சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி புல்லாஅவென்யூ செனாய் நகர் சென்னை