'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட இணைய விளையாட்டுகளால் எழும் ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், புதிய விளையாட்டு, 'ஆப்'பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.





'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட பல இணைய விளையாட்டுகளால், கடந்த சில ஆண்டுகளில், பலர் உயிரிழந்தது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்த ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க, 'சைபர் டிரைவியா' என்ற, விளையாட்டு, 'ஆப்' எனப்படும் செயலியை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது.இதுகுறித்து, என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சைபர் டிரைவியா எனப்படும், 'ஆப்'பில், பல விடைகளுடன் கூடிய கேள்வி தொகுப்புகள் இருக்கும். சரியான விடை கூறும் குழந்தைகளுக்கு, பரிசு புள்ளிகள் வழங்கப்படும்.