நாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி  எனும் பகுதியில்
பெரும் மேக கூட்டம் உள்நுழைகிறது. இதன் தாக்கம் சுமார் 75 கிலோமீட்டர் சுற்றளவு உடையது. இதனால் திருநெல்வேலி வரை சுமார் 5 மணி நேரம் விடாத  கனமழை  உண்டாகும்.  நாளை பிற்பகல் முதல் தமிழகம் முழுமையும் மிதமான மழையே  இருக்கும்.

அத்துடன் ஞாயிறு - 7 ஆம் தேதி அதிகாலை பெரும் மேகக்கூட்டமானது ராமேஸ்வரம் - வேதாரண்யம் இடையே உள் நுழைகிறது. இதன் தாக்கம் காலையில் காரைக்குடி வரையில் நகர்ந்து பெருமழை பெய்யக்கூடும். அது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து மதுரையில் பிற்பகல் 5 மணிநேரம் விடாத  கனமழையை  கொடுக்க உள்ளது.  மதுரையை மையமாக கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் சுற்றுவட்டத்திற்கு  இம்மழை  மேகம் பெரும் மழையை கொடுக்கும். இது அன்றி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழையும், பிற பகுதிகளில் மிதமான மழையும் இருக்கும்.

எனவே, மேற்குறிப்பிட்ட சாயல்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகியவை நாளை 6 ஆம் தேதியும் ( சனிக்கிழமையும்),

காரைக்குடி, மதுரை, விருதுநகர், வத்தலகுண்டு, திண்டுக்கல் ஆகியவை 7 ஆம் தேதியும் ( ஞாயிற்றுக்கிழமையும்) .

மிக கனமழையால்  #redalert , #ரெட்_அலர்ட்   க்கு உட்படும் பகுதிகள் ஆகும்.