முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றம்
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களில் 7 பேர் நிர்வாக காரணங்களுக்காக திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,இணை இயக்குநர் மாற்றம் அடிக்கடி நிகழ்வது வழக்கம். சமீபத்தில் 3 மாதங்களுக்கு முன்பு 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 பேர் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது*
*இதன்படி கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.பாலா திருநெல்வேலிக்கும், அங்கு பணியாற்றிய ச.சக்திவேல் முருகன் கன்னியாகுமரிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றி 3 ஆண்டுகளை நிறைவு செய்யாத 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கே.அருளரங்கன் பெரம்பலூர், கோவை அ.பாலு முத்து சிவகங்கை, சேலம் கே.தங்கவேல் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ஆஷா கிறிஸ்டி எமரால்ட் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.