அரசு ஊழியர் ஒருவரின் மனைவி குடும்பநல
அறுவை சிகிச்சை செய்து* *கொண்ட நாளிலிருந்து அரசு ஊழியருக்கு மருத்துவச் சான்றின் பேரில் 7 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்* .*
*முதல் அறுவை சிகிச்சை பயனளிக்காதபோது மனைவி இரண்டாவது அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் ஏழு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் (அரசாணை எண் 470 நிர்வாகத்துறை நாள் 14. 11. 1 990)*
*இந்த விடுப்புடன் அரசு விடுமுறை அல்லது பிற விடுப்புகளை சேர்த்து* *எடுக்கலாம் .இந்த விடுப்புகளை சாதாரணமாக விடுப்பு வழங்கும் அலுவலரே வழங்கலாம்.( அரசாணை எண் 356, நல்வாழ்வுத்துறை நாள் :22. 2. 1982)*
*ஆண் அரசு ஊழியர் குடும்பநல அறுவை சிகிச்சை* *செய்துகொண்டால் எட்டு நாள் மட்டுமே விடுப்பு வழங்கப்படும் அடிப்படை விதி இணைப்பு 7 இன் விதி (2)உள்ள துணை விதி 7(ஏ)இன் கீழ்*
*
*அரசு பெண் ஊழியர் Non-Puerperal sterilization -அறுவை சிகிச்சை செய்து* *கொண்டால் 20 நாள் தற்செயல் விடுப்பு வழங்கலாம். மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு கிடைக்காது* (மேற்படி விதி)
**தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் ஊழியர் குடும்ப கட்டுப்பாடு அறுவை* *சிகிச்சை செய்து கொண்டால் அவருக்கு இருபது நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும்* . **அரசாணை எண் 299. நல்வாழ்வுத்துறை* நாள் :10.
03.1982**
*சில நேரங்களில் அறுவை சிகிச்சை காரணமாக மேற்படி விடுப்புக்கும் அதிகமாக சிறப்பு விடுப்பு தேவைப்பட்டால் மருத்துவ அலுவலர் சான்றின் பேரில் அதிகமான விடுப்பு வழங்கப்படும் அரசாணை எண் 644 நல்வாழ்வுத்துறை நாள் 25.1982.*