மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்., மாணவ மாணவியர்கள்!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து மாவட்ட மக்களும்., தமிழ்க்கடவுள் முருகனின் பக்தர்களும் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
மேலும் சூரசம்ஹாரத்தினைக்கான மாவட்ட மக்கள் அனைவரும் நவம்பர் 13 ம் தேதியன்று வருகை தந்த வண்ணம் இருப்பார்கள். இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 13 ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப்தந்தூரி அவர்கள் உத்தரவிட்டார்.