கடவுள் என்று யாரும் இல்லை என்று தனது கடைசி புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.


"மனிதனின் பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இனி பூமி 100 வருடங்களுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம்" என்று அதிரடியாக கூறியவர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 1942-ம் வருடம் பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தவர். ஆனாலும் தனது மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 வருடங்களுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்தவர். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் இவரது எழுத்துக்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.


இவர் தனது 76வது வயதில் கடந்த மார்ச் மாதம் காலமானார்.


இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு இவர் தொகுத்த பல தகவல்கலை திரட்டி Brief Answers to the Big Questions என்ற புத்தகத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கின்றனர். ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி புத்தகம் என்று சொல்லப்படும் இதில் ஏலியன், வான்வெளி, சோலார் சிஸ்டம் உள்ளிட்ட பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.


இந்த புத்தகத்தில் கடவுள் குறித்து தகவல் தெரிவித்துள்ள ஸ்டீபன் ஹாக்கிங், "கடவுள் என்பவர் இல்லவே இல்லை. இந்த உலகத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. பிரபஞ்சத்தை யாரும் இயக்கவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


கடவுள் குறித்து ஸ்டீபன் பேசுவது இது முதல் முறை அல்ல. பல கூட்டங்களில் கடவுள் குறித்த கேள்விகளுக்கு, "கடவுள் இல்லை" என்பதையே அவர் பதிலாக கூறியுள்ளார். 2015ம் வருடம் மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கடவுள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு "கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. மதங்கள் கூறும் கடவுளின் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை" என்று தெரிவித்தார். இவரின் இந்தக் கருத்துக்கு மத அமைப்புகள் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தன.


whats app group1


whats app group 2