
உலக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கு அனைத்து உலக நாடுகளும் இணைந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளை அளிப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல, அதிநவீன தொழிநுட்பம் மற்றும் பல புதிய முயற்சியினால் மட்டுமே அதனைக் குறைக்க முடியும் என்று பல அறிஞர்கள் கூறிவருகின்றனர்.

அனைவரும் முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவைச் சேர்ந்த ராஜகோபாலன் வாசுதேவன் என்பர் பிளாஸ்டிக் கழிவுகளை புதிய தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் செங்கற்களாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார்.
இந்த புது வகை பாலிஸ்டிக் செங்கற்களுக்கு பிளாஸ்டோன் பிளாக் என்று அவர் பெயரிட்டுள்ளார். ஒரு பிளாஸ்டோன் பிளாக் தயாரிக்க 300 பிளாஸ்டிக் பைகள் மற்றும் 6 பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் தேவைப்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பிளாஸ்டோன் பிளாக் தயாரிக்க ரூ.40 செலவாகிறதாம், தயாரிக்கப்பட்ட பிளாஸ்டோன் பிளாக்களை வெறும் ரூ.80ற்கு விற்பனை செய்கிறார்.

சாதாரண செங்கற்களை காட்டிலும் இந்த பிளாஸ்டோன் பிளாக்கள் அதிக காலம் நீடித்து உழைப்பதுடன், வாட்டர் ப்ரூப் செங்கல்லாகப் பயன்படுகிறது. இதற்கு முன்பு ராஜகோபாலன் வாசுதேவன் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை வைத்துத்தான் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவர் கண்டுபிடித்துள்ள பிளாஸ்டோன் பிளாக்களை பயன்படுத்தி மகாராஷ்டிரா அரசு, இலவச கழிவறைகளை கட்டவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக,ராஜகோபாலன் வாசுதேவனிடம் கலந்துரையாடி வருவதாக மகாராஷ்டிரா அரசு நேற்று தெவித்துள்ளது.