1. உலக அளவில் ஏறத்தாழ 36 மில்லியன் மக்களுக்குக் கண் பார்வை கிடையாது.

2. கிட்டத்தட்ட 217 மில்லியன் பேருக்கு ஏதோ ஒரு வகையில் கண் பார்வைப் பிரச்சினை இருக்கிறது (Moderate to Severe Visual Impairment - MSVI).

3. 65 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் காடராக்டால், உலகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

4. கண் பார்வைப் பிரச்சினை இருப்பவர்களில் 55% பெண்கள்.

5. கண் பார்வைப் பிரச்சினை இருப்பவர்களில் 89% பேர் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வாழ்பவர்கள்.

6. கண் பார்வை பிரச்சினையில் 75% பிரச்சினைகளைத் தடுக்க முடியும்.

7. 1990ஆம் ஆண்டில் கண் பார்வைக் கோளாறுள்ளவர்களின் எண்ணிக்கை 4.58%; 2015ஆம் ஆண்டு அது 3.37% ஆகக் குறைந்துள்ளது.

8. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலகக் கண் பார்வை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

9. இந்த ஆண்டுக்கான சிந்தனை: எங்கும் கண் பராமரிப்பு (Eye Care Everywhere).

10. கிட்டப் பார்வை பிரச்சினையால் 1 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

- ஆஸிஃபா