''அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, வரும் ஜனவரி 1முதல், எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., பாடம் போதிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் அருகே, குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து, கொங்கர்பாளையம் கிராமத்துக்கு, 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவக்கி வைத்து, பேசியதாவது: குண்டேரிப்பள்ளம் அணைக்கு கீழே, தலா, நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரு தடுப்பணை கட்டப்படும். ஜன., மாதத்தில் பணிகள் துவங்கும். இதனால், ஆழ்துளை கிணறு விவசாயிகள் பயன்பெறுவர். அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, ஜனவரி 1 முதல், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளாக, ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரப்படும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, அடுத்தாண்டு நான்கு சீருடை வழங்கப்படும். ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, டிச., மாதத்தில் கணினி மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும். கோபி அருகே கரட்டடிபாளையத்தில், 489 பயனாளிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைச்சர் செங்கோட்டையன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தை, மின்சாரம் பற்றாக்குறை இல்லாத வகையில் உருவாக்க, மும்முனை மின்சாரம் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். இதன்படி அடுத்தாண்டு பிளஸ் 2 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் மாற்றப்படும். இதேபோல் அறிவியல் ஆய்வகம், தலா, 20 லட்சம் ரூபாயில், டிசம்பர்  மாத இறுதிக்குள், 671 மேல்நிலைப்பள்ளிகளில் தொடங்கப்படும்.

whats app group1

whats app group 2

whats app group 3