தமிழக அரசின் அதிரடி திட்டம்! இனி, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை!!
நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, தமிழக மாணவர்கள் நீட் உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் தேர்வை கண்டு பயப்பட தேவை இல்லை என தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும், தமிழக அரசால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
3200 ஆசிரியர்கள் கொண்டு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது