கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என கலெக்டர் சுப்ரமணியன் பேசினார்
கள்ளக்குறிச்சியில் நடந்த அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது
கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரத்தை வரும் கல்வியாண்டில் சிறந்த மாவட்டமாக நிரூபிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைவிட கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் சிறந்து விளங்குகிறது
மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி கல்வி போதித்தால் சிறந்து விளங்க முடியும். அதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது
மாணவர்கள் முன்னேற ஆசிரியர்கள் பாதை அமைத்து தர வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு அதிகளவில் வர துவங்கியுள்ளனர். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும்.பள்ளி சிறந்து விளங்க தலைமையாசிரியர் பங்கு மிக முக்கியமானது
ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தர வேண்டும்.கல்வியில் விழுப்புரம் மாவட்டம் கடைசி என்பதை மாற்ற வேண்டும்
வரும் கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயருவதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளிகல்வி மற்றும் மருத்துவ துறையில் விழுப்புரம் மாவட்டம் சிறந்து விளங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்