*இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாநகராட்சிக்கு
உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படும், என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்*
*இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை*
*இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக ஓவியம், ஸ்லோகன், கொல்லேஜ், குறும்படங்கள், ஸ்கிட், மீம்ஸ், ஜிங்கிள்ஸ், கதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும்*
*ஒவ்வொரு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போட்டிகளை நடத்தி அவற்றில் சிறந்த ஒரு படைப்பை தேர்வு செய்து, பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் மென்வடிவ நகலினை மாநகராட்சியின் http://chennaicorporation.gov.in/election_competition என்ற இணையதளத்தில் வரும் 17ம் தேதி மாலை 5.45 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்*
*ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் முதலிடம் பெறும் படைப்பினை மட்டும் மென்வடிவத்தில் பதிவேற்றம் செய்தும், அதனை மட்டும் மாவட்ட தேர்தல் அலுவலகம், ரிப்பன் மாளிகை, சென்னை - 3 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு வரப்பெறும் படைப்புகளில் முதல் 3 இடங்களை பெறும் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்*
*எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களும் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டிகள் நடத்தி முதலிடம் பெறும் படைப்பினையோ அல்லது சிறந்த ஒரு படைப்பினையோ தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி சார்பாக மாநகராட்சி இணையதளம் மற்றும் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*