தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலை okப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி?
பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.
                                                   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்புரை வழங்கினார். இதில் தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி நாகராஜ் பேசும்போது ,   பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் , மீட்புப்பணிகள்   குறித்து நேரடி செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும் என்றார். நிகழ்வில்  தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர்  ராஜவேல்,தீயனைப்போர் தமிழ்செல்வம் , அறிவழகன்,கண்ணன்,திருநாவுக்கரசு,ஆனந்தகுமார் ஆகியோர்  பாதுகாப்பான தீபாவளி  குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் . சந்தியா, கீர்த்தியா, காயத்ரி , காயத்ரி, பாலசிங்கம் , அய்யப்பன்,நித்யகல்யாணி உட்பட பல மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
  பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி நாகராஜ் பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.
மேலும் விரிவாக :
விபத்தில்லா, மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட, மாணவ - மாணவியருக்கு, தீயணைப்புத்துறை அதிகாரி நாகராஜ்  பட்டாசு வெடிப்பது தொடர்பாக கொடுத்த டிப்ஸ்:
* தீ விபத்தை A,B,C,D,E என வகை படுத்துகின்றனர். A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும். Bஎன்பது ஆவியாகி எண்ணெயில் பட்டு தீ பிடிப்பது ஆகும். இதனை.மணல் போட்டு அணைத்தல் வேண்டும். FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு தீயை கண்டுபிடி, I என்ற எழுத்துக்கு தீயை தெரியபடுத்துதல் R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல் E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளியேறுதல் என்கிற விளக்கத்தை கொடுத்தார்.
மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா, அப்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு வெடிக்கவும். வெடிக்காத வெடியை கையில் எடுக்க கூடாது. ராக்கெட் வெடி வாங்க வேண்டாம். குப்பைகளை பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம். இறுகிய உடைகளை போட்டு கொண்டு வெடி வெடிக்க வேண்டும். தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே ஊற்றாமல் கப்பில் அள்ளி தெளிக்க வேண்டும்.
பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள்.
டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை கண்டிப்பாக அணியக் கூடாது.
மூடிய பெட்டிகள், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது.
மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும், மனநிலையும் பாதிக்கும்.
காதுகளை செவிடாக்கும்.பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்து கொண்டோ உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம்.
பாதுகாப்பான தொலைவில் வைத்தே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* தளர்வான ஆடை மற்றும் எளிதில் தீப்பற்றும் ஆடை அணிந்து, பட்டாசு வெடிக்கக் கூடாது
* பட்டாசை கையில்வைத்தோ, உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம். பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள்.
* மூடிய பெட்டி, பாட்டில்களில், பட்டாசு
வெடிக்க கூடாது. குடிசை உள்ள பகுதிகளில், ராக்கெட்டுகளை வெடிக்க கூடாது
* குழந்தைகள் தனியாக நின்று, பட்டாசு வெடிக்க கூடாது.பெற்றோரின் துணையுடன், வெடிக்க வேண்டும்.
* அதிக சப்தமான பட்டாசு வேண்டாம்.
* விலங்குகளையோ, வேறு யாரையுமோ துன்புறுத்தும் வகையில், பட்டாசு வெடிக்க கூடாது
 
  *பட்டாசு கொளுத்துமிடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ளுங்கள்.
*ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்ட வெளிப்  பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
  *பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனைசெய்யும் கடைக்கு முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக் கூடாது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்போ, பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.