இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்
, விண்வெளியில் கெப்ளர் திரட்டிய அனுப்பிய தகவல்களின் மூலமாக, நட்சத்திரங்களுடன் சேர்த்து, மறைந்திருக்கும் எண்ணற்ற கோள்களால் நிரம்பியதுதான் வானம் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த ஆளில்லா விண்வெளி தொலைநோக்கியை கடந்த 2009-ஆம் ஆண்டில் நாசா விண்ணில் ஏவியது. இதன் மூலமாக சூரிய குடும்பத்தைச் சுற்றியிலும் 2,600க்கும் மேற்பட்ட கோள்கள் இருப்பதை கண்டறிய முடிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாசா அறிவியல் இயக்குநரகத்தின் இணை நிர்வாக அதிகாரி தாமஸ் சுர்பேச்சன் கூறியதாவது:
கோள்களைத் தேடி நாசாவால் அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது விண்கலமான கெப்ளர் நமது எதிர்பார்ப்புகளையும் தாண்டி பெருமளவில் செயல்பட்டிருக்கிறது. சூரிய குடும்பம் மற்றும் அதையும் தாண்டி உயிரினம் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை அது வழங்கியது.
எண்ணற்ற கோள்கள் இருப்பதைக் காட்டியுள்ளதோடு மட்டுமல்லாமல், அறிவியல் சமூகத்தில் புயலைக் கிளப்பக் கூடிய புது வகையான ஆராய்ச்சிகளுக்கும் கெப்ளர் வழிவகை செய்துள்ளது என்றார் அவர்.