டிசம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 348 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 349 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 17 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1287 – நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1542 – இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள்.
1819 – அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
1900 – மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
1911 – ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
1918 – பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
1939 – நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
1941 – உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
1971 – வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1972 – அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
2003 – சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக றிவித்தார்.
2003 – பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
2004 – தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1503 – நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
1546 – டைக்கோ பிரா, டேனியப் பிரபு (இ. 1601)
1895 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ், (இ. [[1952])
1895 – போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (இ. 1952)
1924 – ராஜ் கபூர், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 1988)
1946 – சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (இ. 1980)
1947 – டில்மா ரூசெஃப், பிரேசில் அரசியல்வாதி
1953 – விஜய் அமிர்தராஜ் இந்திய டென்னிஸ் வீரர், நடிகர்.
1966 – எல் தோர்னிங் இசுமிட், டென்மார்க் அரசியல்வாதி
1979 – சாமர சில்வா, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர்
1984 – ராணா டக்குபாதி, இந்திய நடிகர்
1984 – எட்வர்ட் ரைன்ஸ்போர்ட், சிம்பாப்வே துடுபாட்ட வீரர்
1988 – வனேசா ஹட்ஜன்ஸ், அமெரிக்க நடிகை
இறப்புகள்
1591 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1542)
1799 – ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் முதலாவது அரசுத் தலைவர். (பி. 1732)
1953 – வி. ஐ. முனுசாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (பி. 1889)
1959 – சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (பி. 1879)
2006 – அன்ரன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி. 1938)
சிறப்பு நாள்
இந்தியா – எரிபொருள் சேமிப்பு நாள்