திருச்சியில், பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான
சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 18ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறை அறிவிப்பு, திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களக்கும் பொருந்தும் எனவும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 05.01.2019 அன்று சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து. மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.