உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸாப்ப் மிகவும் உதவியாக உள்ளது. facebook நிறுவனம் வாட்ஸப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை உலகம் முக்குவதும் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு வாட்ஸ்ஆப் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுகிறது என்றும் அதனை உடனே தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியது. அதைத் தடுக்க வாட்ஸ்ஆப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது. அப்படி இருந்தும் இன்னும் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும் இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் சேவையை அளிப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் அணைத்து பண பரிமாற்ற விவரங்கள் அனைத்தும் இந்தியாவிலேதான் சேமிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அதற்கான அலுவலகம் இந்தியாவில் திறக்கப்பட்டது.
வாட்ஸ்ஆப் செயலியை ஜியோபோன் போன்ற தரம் உயர்ந்து ஓஎஸ் இயங்குதளப் பியூச்சர் போன்களிலும் பயன்படுத்த முடியும். ஆனால் விரைவில் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பல போன்களில் பயன்படுத்த முடியாது என்பதுதான் வருத்தமான செய்தி.
நோக்கியா S40 போனில் 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப் செயலி இயங்காது. மேலும் 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஐபோன் 7 மற்றும் ஆண்டிராய்டு 2.3.7 இயங்குதளப் போன்களிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.
சென்ற ஆண்டு 2017-டிசம்பர் 31 முதல் விண்டோஸ் போன் 8.0, பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10 போன்ற போன்களுக்கான ஆதரவையும் வாட்ஸ்ஆப் நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது