♦ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் 4வது  நாளாக நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 180 பேர் மயக்கமடைந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


♦ மருத்துவ குழுவினர் நேரடியாக  டிபிஐ வளாகத்துக்கு வந்து உதவி வரும் நிலையில் போராட்டம் இன்னும்  தீவிரமாகும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

♦சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்களாக சென்னை  டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

♦நேற்று முன்தினம் காலையில் இருந்து டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம்  இருந்துவரும் ஆசிரியர்களில் இதுவரை 180 பேர் மயக்கம் அடைந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

♦இதனால்  ஆசிரியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

♦டிபிஐயில் இரவு  பகலாக நீர் அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு  ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல்  தலைவர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

♦இதற்கிடையே  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் பேச்சுவார்த்தை  நடத்தி ஜனவரி 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.  அதில் சமாதானம் அடையாத ஆசிரியர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி  உள்ளனர்.

♦இந்நிலையில், நேற்று மாலை வரை மயங்கி விழுந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை  180 ஆக உயர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். போராட்டம்  நடக்கும் இடத்தில் அதிக அளவில் ஆசிரியர்கள் குவிந்துள்ளதால், 108  ஆம்புலன்ஸ் குழுவினர் நேரடியாக டிபிஐ வளாகத்துக்கு வந்து ஆசிரியர்களுக்கு  மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.

♦இந்நிலையில், அரசு ஊதிய உயர்வு  தொடர்பாக ஆணை பிறப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள்  தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அங்கிருந்து  அப்புறப்படுத்த போலீசார் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

♦ஆனால் தமிழகம்  முழுவதும் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ரயில், பஸ்   மற்றும் வேன்களில் வந்துக் ெகாண்டே இருக்கின்றனர். இதனால் போலீசார்  ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

♦மேலும், டிபிஐ வளாக  கழிப்பறையை ஆசிரியர்கள் பயன்படுத்தி வருவதால், அதற்கான தண்ணீர்  சப்ளையை அரசு நிறுத்திவிட்டது. இதனால் ஆசிரியர்கள் மேலும் அவதிப்பட்டு  வருகின்றனர்.

Whats App Group link