சென்னை; 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 10-ம் வகுப்பு தமிழ்
மற்றும் ஆங்கில பாடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தாள் பொதுத் தேர்வுகள், மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிபாட தேர்வுகள் வழக்கமான நேரத்தில் நடைபெறும். தேர்வு நேர புதிய நடைமுறையை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



Whats App Group link