சென்னை: அப்படி எந்த திட்டமும் இல்ல... இல்ல... மறுப்பு சொல்லியிருக்காங்க. யார் என்று கேட்கிறீர்களா?


25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுதும் 42 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையும் தனித் தனி சத்துணவுக் கூடங்கள் இயங்கிவருகிறது. இந்நிலையில் அவற்றை ஒரே மையமாக மாற்றி இயங்கச் செய்யவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர். சமூகநலத்துறை ஆணையர் அனுப்பியுள்ள அறிக்கையில், அந்த மையங்களில் கூடுதலாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களை காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Whats App Group link