புதுக்கோட்டை,டிச.7: தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலச் செயலாளர் பாவலர் மீனாட்சிசுந்தரம் வழிகாட்டுதலின் படி  புதுக்கோட்டை தைலாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கஜாபுயல் நிவாரணம் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் அம்பை கணேசன் தலைமை தாங்கினார்.

மாநில துணைச் செயலாளாளர் மன்றம் நா.சண்முகநாதன்  பாதிக்கப்பட்ட நரிமேடு,சமத்துவபுர நிவாரண பொருட்களை வழங்கினார்.

விழாவில்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச்செயலாளாளர் செல்வராசு,திருநெல்வேலி மாவட்டச்செயலாளர் தங்கத்துரை, மாவட்டத் தலைவர் முத்துராமன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்னவாசல் ரவிச்சந்திரன் மற்றும் புதுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் கார்த்திகேயன்,செந்தில்வேல்,பிரான்சிஸ் சேவியர்,ஆனந்தபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 நிவாரணப்பொருட்கள்  நகரின் பகுதிக்கப்பட்ட பகுதிகளான  நரிமேடு மற்றும் சமத்துவப்புரத்தில் வாழும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

விழாவின் முடிவில்  பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி நன்றி கூறினார்..

Whats App Group link