அன்னவாசல்,டிச.10 : சிறந்த கல்விச் சிந்தனையாளர் விருது பெற்ற உருவம்பட்டி பள்ளி ஆசிரியர் முனியசாமியை  இலுப்பூர்  மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பாராட்டினார்.

லயன்ஸ் கிளப் ஆப் கிரீன்சிட்டி மற்றும் டீம் டிரஸ்ட் ஆகியன சார்பில் மனித உரிமைகள் தினவிழா  திருநெல்வேலி தெற்கு புற வழிச்சாலையில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ விஜயா கார்டனில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் கல்வித்துறை,மருத்துவதுறை,இரணுவத்துறை,நூலகத்துறை மற்றும்  விளையாட்டுத்துறையில் சாதனைபடைத்தோர்,
சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபடுவோர்,பொது நல சேவையில்  சாதனைபுரிந்தவர்கள்  என மொத்தம் 200  பேருக்கு கல்விச்சிந்தனையாளர் விருது,சமூக நல சிந்தனையாளர் விருது,சிறந்த மனித நேய பண்பாளர் விருது,சிறந்த இராணுவ வீரர்விருது ,சிறந்த பெண்கள் நல பாதுகாவலர் விருது  என விருதுகள்வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி பள்ளி ஆசிரியர் கு.முனியசாமிக்கு மாணவ,மாணவியர்களின் கல்வி நலனில் சமூக அக்கறையோடு செயல்பட்டமைக்காக சிறந்த கல்விச் சிந்தனையளர் விருதை பணிநிறைவு பெற்ற திருநெல்வேலி மாவட்ட நீதிபதி எம்.ராமச்சந்திரன்,பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை சிறை கண்காணிப்பாளர்  சி.கிருஷ்ணகுமார்,சமூக ஆர்வலர் திருமலைமுருகன் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள். 

இதையடுத்து, விருது பெற்ற ஆசிரியர் கு.முனியசாமியை இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,பள்ளி துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பெ.துரையரசன்,அரு.பொன்னழகு, தலைமை ஆசிரியை ஜெ.சாந்தி மற்றும்  மாணவ,மாணவியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Whats App Group link