புதுக்கோட்டை,டிச.8:கஜா புயலால் பாதிப்படைந்த தஞ்சை,திருவாரூர்,நாகை,புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் பலவாறான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளில் பாதிப்படைந்த குடும்பங்களில் இருந்து பயிலும் 75 மாணவிகளுக்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஓய்வு பெற்ற விரிவுரையாளர் விஸ்வநாதன் அவர்களின் ஏற்பாட்டில், ஜப்பான் தமிழ்ச்சங்க நண்பர்களின் உதவியால் அரிசி,பருப்பு,நல்லெண்ணெய், சேமியா,கொசுவர்த்திகள், மெழுகுவர்த்திகள், சோப்பு,பற்பொடி,பிஸ்கெட் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பொறுப்பு தலைமையாசிரியர் குணநாயகம் தலைமை வகித்தார்.
விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் துரை,பசீர் அலி ஆசிரியர்கள் குகன்,கண்ணன்,அருந்ததி,நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் செய்திருந்தார்.
ஆசிரியர் கொடியரசன் நன்றி கூறினார்.