வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை: கல்வித்துறை


சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது. உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது.