சென்னை: ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள்
கேலிக்கூத்தாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வியை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.10000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகைகொற்கை பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி 3 கி.மீ தூரத்திலுள்ள பள்ளிக்கு பணி மாற்ற கோரினார். இடமாறுதல் கலந்தாய்வில் 104 கி.மீ தூரத்திலுள்ள பெரிய தும்பூருக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தில் பணி மாறுதலின் போது முன்னுரிமை தரவேண்டும் என்று உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
விதிகள் தெளிவாக உள்ள நிலையில் பணி மாறுதல் கலந்தாய்வு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி விமலா தெரிவித்தா

Whats App Group link