*இந்திய அரசு நிர்வாக பணிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்பட, 24 பதவிகளில், 782 காலியிடங்களை நிரப்ப, முதல்நிலை தேர்வு, இந்த ஆண்டு, ஜூன், 3ல் நடந்தது*
*இந்த தேர்வில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், ஜூலையில் வெளியிடப்பட்டன*
*இதில், 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.பிரதான தேர்வு, செப்., 28 முதல், அக்., 7 வரை நடத்தப்பட்டது*
*மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. இதற்கான முடிவு, நேற்று வெளியிடப்பட்டது*
*இதில், 1,994 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிப்., 4 முதல் நேர்முக தேர்வு நடக்கும்*
*தேர்வானவர்களுக்கு, ஜன., 8 முதல்,www.upsc.gov.in என்ற, இணையதளத்தில் அழைப்பு கடிதம் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது*