புதுக்கோட்டை,ஜன.22 : பிப்ரவரி 1ந்தேதி முதல் 12ந்தேதிக்குள் பிளஸ் டூ செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.
பிளஸ் டூ செய்முறைத் தேர்வு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கலவி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது:செய்முறைத் தேர்வு மாணவர்களின் பேட்ச் பட்டியலை சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் தேர்வுகள் பிரிவில் தெரிவித்து சரி செய்து கொள்ள வேண்டும்.செய்முறைத்தேர்வுகள் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேட்டினை www.tndge.in தேர்வுத் துறை இணையதளத்தில் ஜனவரி 31 க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பிப்ரவரி 1ந்தேதி முதல் 12ந்தேதிக்குள் செய்முறைத் தேர்வு நடத்தி முடித்திட வேண்டும்.செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை பிப்ரவரி 15 க்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.செய்முறைத் தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் ,மதிப்புமிகு தேர்வுத் துறை இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள விதிகளின் படி நடத்திட வேண்டும்.பதினொன்றாம் வகுப்பு அரியர் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்ப கட்டணத்தை துணை இயக்குநர் அலுவலகத்தில் உடனே செலுத்திட வேண்டும். மேலும் ஒரு சில பள்ளிகள் கல்வி தகவல் மேலாண்மை முறைமையில்(எமிஸ்) விடுபட்டுள்ள பதிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இலுப்பூர் க.குணசேகரன்,புதுக்கோட்டை ( பொறுப்பு) ராஜ்குமார்,அறந்தாங்கி(பொ) கு.திராவிடச் செல்வம் ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித் திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,மாவட்ட உதவி திட்ட ஒருங கிணைப்பாளர் பழனிவேலு,பள்ளித் துணை ஆய்வாளர்கள்,மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..