ஜனவரி 12 , 1863
தேசிய இளைஞர் தினம்
கோல்கட்டாவில் பிறந்து இராமகிருஷணரின் சீடரான துறவி விவேகானந்தரின் பிறந்தநாள்... இவர் இந்தியப் பண்பாட்டை பிரசாரம் செய்தார், தன்னம்பிக்கை கருத்துகள் மூலம் இளைஞர்களை ஈர்த்தார். இவரது பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
திருக்குறள்
அதிகாரம்:ஒழுக்கம் உடைமை
திருக்குறள்:137
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி.
விளக்கம்:
ஒழுக்கம் உடையவர் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
பழமொழி
Even fate can be won over with brains
விதியை மதியால் வெல்லலாம்
* எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.
* நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.
பொன்மொழி
நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!
- அப்துல்கலாம்
பொது அறிவு
1.இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
திருமதி. சரோஜினி நாயுடு
2. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்மணி யார்?
பச்சேந்திரி பால்
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
பீட்ரூட்
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
English words and Meaning
Jeer. கேலி செய்தல்
Jolt. குலுக்கல்
Jaw. தாடை எலும்பு
Jerk. உதறல்
Jack.
பளுதூக்கும் இயந்திரம்
அறிவியல் விந்தைகள்
தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.
🐝இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.
🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''
🐝'' ஆனால் இன்று அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு
ஆபத்து வந்துள்ளது
🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
🐝இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.
Some important abbreviations for students
BCG. - Bacillus Calmette Guerin (Anti TB Vaccine)
BCCI. - Board of Control for Cricket in India
நீதிக்கதை
செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம்
செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும்
அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது.
அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை.
அவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான்.
அந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப்
பற்றியும் தெரிந்திருந்தது.
ஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான்
கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப்
பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான்.
குதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது.
வணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம்
என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான்.
காட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித்
திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.
முதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத்
தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத்
துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது.
அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும்
நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது.
திருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை.
குதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை
தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது.
தன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த
முதலாளி வீட்டுக்குள் சென்றான்.
அங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத்
தெளிவித்தார்கள். அதற்கு
உணவு அளித்தார்கள்.
அதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து
விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது.
பயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை
இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது.
பயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக்
குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.
பணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள்.
பசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது.
அந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில்
அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள்
கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது.
பசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என
நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது.
மணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள்.
எலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது
செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய
குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள்.
அவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத்
தவறுமில்லை என்று வாதிட்டான்.
இந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத்
திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக்
காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா?
இதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு.
ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம்.
இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை
கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
தலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச்
சென்றான்.
இன்றைய செய்திகள்
12.01.2019
* மத்திய அரசால் புதிதாக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் புதிய இடமாக, திருவாரூர் மாவட்டத்தின் திருக்காரவாசல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
* பிளாஸ்டிக் சாலை, 2 கோடி கழிப்பறை திட்டத்துக்கு 10 கோடி டன் பிளாஸ்டிக் தேவைப்படுகிறது: ‘பிளாஸ்டிக் மனிதர்’ பேராசிரியர் ஆர்.வாசுதேவன் தகவல்.
* மேட்டூர் அணைக்கு நேற்று 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இஸ்தோமினுடன் பெடரர் மோதல்.
* இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
Today's Headlines
🌹 Tirucaravasal of Tiruvarur district has been selected as the new place for hydrocarbon in Tamil Nadu in a newly published auction announcement by the central government.
🌹 For Plastics Road, a 2 crore toilet project requires 10 crore tons of plastic informs plastic man' professor R.Vasudevan .
🌹 The water level in Mettur dam today was increasing upto more than 109 cubic feet which was 75
🌹Federer clash with Estomin in the first round of Australian Open Tennis
🌹 The first ODI between India and Australia is being played today💐🎖
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..