ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டமான நேற்று மறியலில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று காலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், தாலுகா தலைநகரங்கள் என 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். சில இடங்களில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது ெசய்தனர். தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அந்தந்த பகுதியின் போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
சில இடங்களில் மட்டும் மாலையில் ஜாக்டோ-ஜியோவினர் விடுவிக்கப்பட்டனர். பெரும்பாலான இடங்களில் விடுவிக்க காலதாமதம் செய்தனர்.
இரண்டாம் நாளான நேற்று அதிக அளவில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். அதிக அளவில் பெண்கள் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் நாளான நேற்று அதிக அளவில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். அதிக அளவில் பெண்கள் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டங்களை முன்னெடுத்து செல்வதற்காக, ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னையில், நேற்று நடந்த மறியல் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கராஜன், மாயவன், அன்பரசு, வெங்கடேசன், சங்கர பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சென்னை ரிப்பன் மாளிகையின் முன் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, தமிழகம் முழுவதும் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் ஆண் ஊழியர்களை தாமதமாக விடுதலை செய்தனர்.மறியல் போராட்டத்தில் தலைமை தாங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் அளித்த பேட்டி:
கால வரையற்ற வேலை நிறுத்தத்துடன் கூடிய போராட்டம். எங்கள் வாழ்வாதார பிரச்னையை முன்வைத்து நடத்துகிறோம்.
அதனால் முதல்வர் இது குறித்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் அரசு தரப்பில் கொடுத்த ஒரு நபர் குழுவின் அறிக்கை வெற்று அறிக்கையாக இருக்கிறது. நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதை அறவே ரத்து ெசய்ய வேண்டும். பள்ளிகளை இணைக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வி நிர்வாகத்தை முற்றிலும் அழிக்க நினைக்கிறது.
இவற்றை கைவிட்டு, 9 அம்ச கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசு ஜாக்ேடா-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால், விடுமுறை நாட்களில் வகுப்பு எடுக்க தயாராக உள்ளோம்.எங்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளை வைத்து பள்ளியை நடத்த உள்ள அரசு தெரிவித்து, இந்த போராட்டத்தை முறியடிக்க முயிற்சிக்கிறது
. அந்த பட்டதாரிகள் அந்த பணிக்கு வர மாட்டார்கள் என்று நம்புகிறோம். ஊதியக் குழுவின் பரிந்துரையை பரிசீலித்து நிதி நிலைக்கு ஏற்ப செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிக்கையில் எங்கள் கோரிக்கை மீதான எந்த தீர்வும் இல்லை என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. எந்த சாராம்சமும் இல்லை என்று தெளிவு படுத்திவிட்டது.
அது வெற்று அறிக்கை. அதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் :
சென்னை உயர்நீதி மன்றம், 25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.
இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறியதாவது:ஜாக்டோ-ஜியோ போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஆனால், அரசின் வற்புறுத்தல் காரணமாக இன்று மாலை 4 மணி அளவில் மாணவரின் மனு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 மணி நேரமாக விவாதிக்கப்பட்டு ஒரு உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
அதில் 25ம் தேதிக்குள்ளாக ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக எங்களுக்கு செய்தி வந்துள்ளது. அப்படி உத்தரவு போடத் தெரிந்த நீதிமன்றம் எங்கள் கோரிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வாய்திறக்கவில்லை. அரசு தரப்பில என்ன செய்திருக்கிறீர்கள், அதற்கான தீர்வு குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கவேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தால் நாங்கள் வரவேற்று இருப்போம். ஆனால், நீதிமன்றம் ஒரு தரப்பாக உத்தரவிட்டுள்ளது. இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
இருப்பினும், மேல் முறையீட்டுக்கு செல்லும் எண்ணம் எங்களுக்கு உள்ளது. அதற்காக, ஜாக்டோ-ஜயோ அமைப்பின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் போட்டு ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம்.
ஒருங்கிணைப்பாளர்கள், சங்கத் தலைவர்கள் பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளதால் அவர்களுக்கு இந்த நீதிமன்ற உத்தரவு குறித்து தெரியப்படுத்தி வரவழைத்து பேசி அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..