Polio drops : health departmentவரும் பிப்., 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் சுகாதார துறை தீவிரம் காட்டி வருகிறது.






 போலியோ பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க, நாடு ழுவதும் ஜன., பிப்., மாதங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.




இந்தாண்டு இதை மாற்றி, ஒரே முறை சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பிப்., 3ம் தேதி, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையஙகள் Primary Health centre  உள்ளிட்ட, 40 ஆயிரத்துக்கும் அதிகமான சொட்டு மருத்து முகாம்கள் அமைக்க, பணிகள் நடந்து வருகின்றன. காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை இம்முகாம்கள் நடக்கும். சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில், கடந்தாண்டு போலவே, இந்தாண்டும், 1,581 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.





மாவட்டத்தில், 3.2 லட்சம் குழந்தைகளுக்கும் மேல், போலியோ சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து வரும், குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனை, ESI HOSPITAL இ.எஸ்.ஐ., மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட்கள், BUS STANDS  ரயில்வே ஸ்டேஷன்களில், RAILWAY STATIONS  24 மணி நேரமும் 24 HOURS  செயல்படும், சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். இது தவிர, நடமாடும் ஊர்திகளும் இயக்கப்படும். சொட்டு மருந்து வழங்காமல் விடுபட்ட, குழந்தைளுக்கு ஒரு வாரத்துக்குள் வீடுதேடிச் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும்

Whats App Group link