வாட்ஸ் ஆப் தற்போது அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக உள்ளது. அந்நிறுவனமும் பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அந்த அவகியில் அடுத்து நான்கு புதிய அப்டேட்டுகளை வழங முடிவு செய்துள்ளது. அந்த நான்கு அப்டேட்டுகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு, பிங்கர் பிரிண்ட் லாக்: வாட்ஸ் ஆப் சாட்களை பாதுகாக்க இந்த பிங்கர்பிரிண்ட் லாக் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த 2.19.3 அப்டேட்டில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படும்.
மிக விரைவில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்குமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடியோ பிக்கர்: பயனர்கள் தங்களின் தொடர்புகளுக்கு ஆடியோ அனுப்புவதற்கு முன்பு ஆடியோ பைல்களை பிளே செய்து செக் செய்யும் வசதி வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.1 வழங்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 ஆடியோ பைல்கள் அனுப்ப முடியும்.ஸ்டிக்கர் இன்டெகிரஷன்: ஸ்டிக்கர் இன்டெகிரஷன் மூலம் வாட்ஸ் ஆப் சாட்களில் ஸ்டிக்கர்களைப் பகிர மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்த முடியும். முதல் முறையாக புதிய ஜிபோர்டு (GBoard) சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. 3டி டச் ஆக்ஷன் ஸ்டேட்டஸ்: இந்த அம்சம் விரைவில் ஐபோனில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 3டி டச் மூலம் ஸ்டேட்டஸ்களின் நிலைமையை பார்த்துக் கொள்ளலாம்.மிக விரைவில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்குமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..