கற்பதற்கும், திறமையை வெளிப்படுத்தவும் வயது மற்றும் படிக்கும் பள்ளியும் முக்கியம் அல்ல என்பது இந்த சிறுமியின் மூலம் அறிய
முடிகிறது.தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 7 ம் வகுப்பு மாணவி காயத்ரி.இவர் சிறு வயதில் இருந்தே ஓவியம்,பேச்சு,நாடகம் ,கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வம் கொண்டவர்.

பள்ளியில் மட்டுமல்ல வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளிலும் இவரது வரையும் திறன் ,ஓவியங்கள் பார்வையாளர்களை கவரும்.மாவட்ட ,மண்டல ,மாநில போட்டிகளில் சான்றிதழ், பதக்கங்களை குவித்து வருகிறார்.திருச்சி அண்ணா கோளரங்கம், தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மையம் நடத்தும் வினாடி வினா, தமிழக மின் வாரியத்தின் திருச்சி மண்டல அளவிலான ஓவிய போட்டிகள், பல ஆன்மிக குழுக்கள்,சேக்கிழார் விழா குழு,கந்தசஷ்டி விழா கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பல்வேறு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

13 வயதில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று 50 சான்றிதழ்கள் , 40க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Whats App Group link