ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு விலைக்குறைந்த ஜியோபோன்களை அறிமுகம் செய்தது. இந்த போனுக்காக ரூ.49 விலையில் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர்களையும் வழங்கியது. தற்போது மீண்டும் ஜியோபோனுக்காக நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு ஆஃபர்களை வழங்கியுள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் இந்த இரு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.594 ரீசார்ஜ்: இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி ஆகியவை 168 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கபப்டுகிறது. ரூ.297 ரீசார்ஜ்: இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி அதிவேக டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Whats App Group link