*அரசுப் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலக் கல்வியை சரளாக கற்பதற்கு 55 வகையான புதிய செயல் திட்ட கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பலர் ஆங்கிலப்பாடம் கற்பதற்கு சிரமப்படுகின்றனர்
*1 முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ மூலம் அதிக கவனம் செலுத்தாமல் 9ம் வகுப்புக்கு வரும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு இந்த சிக்கல் அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்கள் 10ம் வகுப்பு செல்வதிலும் தடை ஏற்படுகிறது
*இந்நிலையை மாற்ற 9ம் வகுப்பில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில கற்றல் திறனை மேம்படுத்த “குறைதீர் கற்பித்தல்” என்ற புதிய முறையை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலம் செயல்படுத்த உள்ளனர்
*இதற்காக 55 வகையான ஆங்கிலம் கற்பித்தல் முறை குறித்த புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
*இதில் தொடக்கப்பள்ளி நிலையில் இருந்து படிப்படியாக ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகள் செயல்விளக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக மனித உடல் பாகம் குறித்த ஆங்கில சொற்கள் படத்துடன் உள்ளன. இந்த புத்தகம் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பது குறித்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது
*நெல்லை மாவட்டத்தில் பள்ளக்கால் பொதுக்குடி ஆசிரியை கலாவதி, மானூர் ரஸ்தா பள்ளி ஆசிரியை செண்பக லதா ஆகியோர் மாநில அளவிலான முகாமில் பயிற்சி பெற்றனர். இவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிற 9ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்
*இதற்கு முன்னதாக 9ம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறன் அறிய ‘ரெமிடியல் டெஸ்ட்’ என்ற தேர்வு நடத்தப்பட்டது
*இதில் 0 முதல் 20 மதிப்பெண் எடுத்தவர்கள் 20க்கு மேல் 40 மதிப்பெண் வரை எடுத்தவர்கள் விபரங்கள் கணக்கிடப்பட்டு இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக வாரத்திற்கு 3 வகுப்புகள் கூடுதலாக பயிற்சி பெறுவர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..