ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவர்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களையும் அரசு பள்ளிகளில் வகுப்பு எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.

ஆனால், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக, அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

மேலும், அரசு பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியரை கூட தனியார் பள்ளிகள் அனுப்பக் கூடாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதனால் அரசுப் பள்ளிகளில் கல்விப் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.

Whats App Group link