முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெறுவோர் பெயர்களை இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மத்திய அரசு அறிவித்தது.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்டுள்ள மூவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருது அளிக்கப்படும். ஆனால், விருது வழங்கும் விழா தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை

Whats App Group link